உள்ளூர் செய்திகள்

ரிச்சி தெருவில் ஒரேநாளில் 5 கடைகளை உடைத்து செல்போன், லேப்டாப் கொள்ளை

Published On 2022-09-02 15:57 IST   |   Update On 2022-09-02 15:57:00 IST
  • கடையின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை திருடி சென்றனர்.
  • சிந்தாதிரிபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ரிச்சி தெருவில் ரேடியோ மார்க்கெட்டில் ஒரே நாள் இரவில் 5 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பஷீர் மொபைல் கடையின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை திருடி சென்றனர்.

இதேபோல பிஸ்மு மொபைல்ஸ், நியூ பிஸ்மு மொபைல்ஸ், சயிதா எலக்ட்ரானிக்ஸ், டிஸ்கோ எலக்ட்ரானிக்ஸ் ஆகிய கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதாக சிந்தாதிரிபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News