உள்ளூர் செய்திகள்
கட்டிட என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் பறிமுதல்
- தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
- கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்று சென்றதாக தெரிவித்தார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கட்டிட என்ஜினீயர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ.10 லட்சம் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து விசாரித்த போது அவர், கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்று சென்றதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.