உள்ளூர் செய்திகள்
கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம்
- கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னையில் கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை வருகிற 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்படும் தேதியில் ஜனாதிபதியே மருத்துவமனையை திறப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.