உள்ளூர் செய்திகள்
கேப்டனின் ஒரு வார்த்தை கேட்க... - பார்த்தசாரதி ஆதங்கம்
- தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்த கூட்டம் காட்டுகிறது.
- தமிழக அரசியலே மாறி விடும்.
கமகமத்த கறி விருந்துடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா களைக்கட்டியது. விழாவுக்கு விஜயகாந்தையும் அழைத்து வந்திருந்தார்கள். அவரால் எதுவும் பேச முடியாத நிலையில் கட்டை விரலை தூக்கி மட்டும் காட்டினார். திரண்டிருந்த தொண்டர்கள் 'கேப்டன்' ஒரு வார்த்தைக்கூட பேச முடியவில்லையே என்று ஆதங்கப்பட தவறவில்லை. இது குறித்து தே.மு.தி.க. துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் கேட்ட போது, "தலைவர் மீது இருக்கும் பற்று இன்னும் குறையவில்லை என்பதையே, தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்த கூட்டம் காட்டுகிறது. அவரது உடல்நிலை சரியாக இருந்தால் தமிழ்நாட்டின் நிலைமையே வேறு. அவர் ஒரு வார்த்தை பேசினால் போதும்... தமிழக அரசியலே மாறி விடும். அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறோம்" என்றார்.