உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2025-02-06 11:19 IST   |   Update On 2025-02-06 11:19:00 IST
  • சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் 9 ஆம் நாளான இன்று அதிகாலையில் உற்ச வர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

பின்னர் திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் மற்றும் பெரிய ரத வீதி வழியாக சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வன், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News