இந்தியா
null
பட்ஜெட் 2025- 26: AI மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
- அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தில் கோலோச்சுகின்றன.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையில் சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில், ஏஐ மையங்கள் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் தற்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தில் கோலோச்சும் காலகட்டத்தில் இந்தியாவும் ஏஐ ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.