இந்தியா

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடம் மாறுகிறது

Published On 2025-01-08 11:05 IST   |   Update On 2025-01-08 11:05:00 IST
  • நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
  • 400 பேருக்கு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்பவும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும், பல்வேறு நிர்வாக வசதிக்காகவும் கடந்த 40 ஆண்டுகளாக டெல்லி அக்பர் சாலையில் இயங்கி வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கோட்லா சாலையில் உள்ள இந்திரா பவனுக்கு மாற்றப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்திரா பவன் என பெயரிடப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை வருகிற 15-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., வதேரா மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் என மொத்தம் 400 பேருக்கு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது புதிய முயற்சிக்கும், புதிய முன்னேற்றத்திற்கான தருணம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கோட்லா சாலையில் அமைந்துள்ள இந்திரா பவன் எனும் இந்த கட்டிடம் கட்சி உறுப்பினர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News