இந்தியா
ஐதராபாத்தில் ஒரு ஜோடி கிளி ரூ.1000-க்கு விற்பனை: ஒருவர் கைது
- அதிகாரிகள், கிளிகளை பறிமுதல் செய்து ஆரண்ய பவனில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- முகமது பரூக் கிளிகளை வாங்கி வேறு இடங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐதராபாத் ஐகோர்ட் அருகே முகமது பரூக் என்பவர் அலெக்ஸாண்ட்ரின் கிளிகளை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். இதனை அதிரடிப்படை அதிகாரிகள் கவனித்தனர்.
இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெட்டிகளை சோதனை செய்தபோது, 110 அலெக்ஸாண்ட்ரின் வகை கிளிகள் இருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள், கிளிகளை பறிமுதல் செய்து ஆரண்ய பவனில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கிளிகளை அங்குள்ள பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
முகமது பரூக் கிளிகளை வாங்கி வேறு இடங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு ஜோடி கிளி ரூ.1000 க்கு விற்கப்படுவதாக முகமது பரூக் கூறினார். அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கிளிகள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.