இந்தியா
பெண் பத்திரிகையாளர்கள் கைது விவகாரம்: சட்டசபையில் ரேவந்த் ரெட்டி- கே.டி. ராமராவ் காரசார விவாதம்

பெண் பத்திரிகையாளர்கள் கைது விவகாரம்: சட்டசபையில் ரேவந்த் ரெட்டி- கே.டி. ராமராவ் காரசார விவாதம்

Published On 2025-03-27 20:38 IST   |   Update On 2025-03-27 20:38:00 IST
  • சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் 16 நாட்கள் மேசாமான இரவை சிறையில் கழித்தேன்- ரேவந்த் ரெட்டி.
  • நீங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா சிறைக்கு சென்றீர்கள்- கேடி ராமராவ்.

தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் ஒருவாரம் கழித்து அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது. இது தொடர்பான பிஆரஎஸ் கட்சி செயல் தலைவர் கே.டி. ராமராவ் சட்டசபையில் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் கொடுத்தார். சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் ஜெயிலில் 16 நாள் கொடூரமான இரவை கழித்தேன் என ரேவந்த் ரெட்டி கடும் பதிலடி கொடுத்தார்.

இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

16 நாட்கள் நான் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டேன். அது பயங்கரவாதிகள் அடைக்கப்பட்ட சிறை. என்னை யாரையும் சந்திக்க அனுமிக்கவில்லை. அப்போதும் கூட என்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு தொடர்ந்து மக்கள் நலனுக்காக பணியாற்றினே். என்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு சட்டத்தின்படி வெறும் 500 ரூபாய்தான் அபராதம்.

நான் அடைக்கப்பட்ட சிறை அறையில் இரவு முழுவதம் லைட் எரிந்து கொண்டிருந்தது. மேலும் சுகாதாரமற்றதாக இருந்தது. தேவைப்பட்டால் எம்எல்ஏ-க்களை அழைத்துச் சென்று உண்மை நிலைமை காட்ட முடியும். சிறையில் இருந்து விடுதலை ஆனதும், அந்த துயரத்தில் இருந்து விலக மரத்தடியில் தூங்கினேன்.

இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

இதற்கு கே.டி. ராமராவ், "நீங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா சிறைக்கு சென்றீர்கள். யாராவது ஒருவர் உங்களுடைய ஜூப்ளி ஹில்ஸ் பேலஸ் மீது டிரோன் பறக்கவிட்டு, உங்களுடைய மனைவி அல்லது குழைந்தைகள் படதெ்தை எடுத்தால், அமைதியாக இருப்கீர்களா?. உங்கள் குடும்பத்தைப் பற்றி வரும்போது நீங்கள் எதிர்வினையாற்றுகிறீர்கள்.

பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவாரம் வரை ஜாமின் கிடைக்கவில்லை.

இவ்வாறு கே.டி. ராமராவ் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த ரேவந்த் ரெட்டி "எனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக மோசமான வார்த்தையை பயன்படுத்தினால் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள முடியும்" என்றார்.

சந்திரசேகர ராவ் ஆட்சியின்போது கே.டி. ராமராவ் வீட்டின் மேல் டிரோன் பறக்கவிட்டு படம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News