தமிழ்நாடு

திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Published On 2025-01-01 14:21 GMT   |   Update On 2025-01-01 16:02 GMT
  • பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
  • சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.

அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது.

2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.

இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த வாரத்தில் பள்ளி வேலை நாள் 2 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால் வியாழன், வெள்ளி விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பான தகவல் இணையத்தில் பரவி வந்தது.

இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை ஜனவரி 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கும் என பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News