சினிமா செய்திகள்
null

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

Published On 2024-03-08 05:30 GMT   |   Update On 2024-03-08 05:31 GMT
  • தாய்மொழி தெலுங்கு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாகத் பேசத் தெரியும்.
  • நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 17,695 பாடல்களை பாடியுள்ளார்.

சிங்களப் படங்களுக்கும் பாடியுள்ளார். அவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாகத் பேசத் தெரியும்.

திருப்பதியில் பிரபல பின்னணி பாடகி சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும் ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசீர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News