இந்தியா
null

பட்ஜெட் 2025- 26: விவசாயிகள் வாழ்வை மேம்படுத்த பல முக்கிய அறிவிப்புகள் அறிவிப்பு

Published On 2025-02-01 11:32 IST   |   Update On 2025-02-01 11:38:00 IST
  • 1.70 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • பருத்தி விளைச்சலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்ந்து வருகிறது. ஆகவே வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

1.70 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாய கடன் அட்டைக்கான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்

தாமரை விதைகளுக்கு புதிய வாரியம் பீகாரில் அமைக்கப்படும்

பருப்பு உற்பத்தில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்பட்டு வருகிறது.

யூரியா உற்பத்தில் தன்னிறைவு அடைய ஆண்டொன்றுக்கு 12.7 லட்சம் டன் உர உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பருத்தி விளைச்சலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி உற்பத்தியை மேம்படுத்த 5 ஆண்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News