பெண் டாக்டர் கொலை- ஜிப்மர் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
- ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் டாக்டர்கள் பங்கேற்றனர்.
- வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது.
புதுச்சேரி:
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் படுகொலை செய்யப்பட்டார்.
பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம் நடைபெற்றது.
ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கணக்கான டாக்டர்கள் பங்கேற்றனர். டாக்டர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், பெண் படுகொலைக்கு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்,
தவறுக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அனைத்து மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
2 மணி நேரம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.
போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்திருந்தனர். வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது. சீனியர் டாக்டர்கள்பணியில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று மாலை கடற்கரை சாலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி காந்தி சிலை நோக்கி நடைபெற உள்ளது.