புத்தாண்டு கொண்டாட்டம்- புதுச்சேரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
- 2025-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.
- 10 இடங்களில் வாகன பார்க் கிங் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி 2025-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.
இதற்காக தற்போது இருந்தே சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. நகரில் பிரதான சாலைகளில் வெளிமாநில பதி வெண் கொண்ட வாகனங்கள் அதிகளவில் உலா வருகின்றன.
இதற்கிடையே புதுச்சேரிக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை எங்கு பார்க்கிங் செய்வது என்பது தெரியாமல் நகரை சுற்றிச்சுற்றி வலம் வந்த படி உள்ளனர். ஒருசிலர் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் கார் பார்க்கிங் வசதி குறித்து அறிவதற்காக போக்குவரத்து போலீசார் 'கியூ.ஆர்' கோடு அடங்கிய பல கையை ஆம்பூர்சாலை, செஞ்சிசாலை, எஸ்.வி.படேல் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் வைத்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் 'கியூ.ஆர்' கோடு அடங்கிய வழிகாட்டி அட்டையை வழங்கி வருகின்றனர்.
அதன்படி அண்ணா சாலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி, போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வம், மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் பார்க்கிங் வசதி குறித்து 'கியூ.ஆர்' கோடு அடங்கிய அட்டையை வழங்கினர்.
புத்தாண்டு பண்டிகையையொட்டி முதள் நாளான 31-ந் தேதியன்று புதுச்சேரியில் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், உப்பளம் புதிய துறைமுக வளாகம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி உள்பட 10 இடங்களில் வாகன பார்க் கிங் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தபார்க்கிங் இடங்களை அறியும் வகையில் தனி 'கியூ ஆர்' வழிகாட்டி அட்டையை போக்குவரத்து போலீசார் வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.