பாரிஸ் ஒலிம்பிக் 2024

மனு பாக்கரை சுற்றிவளைத்த 40 பிராண்டுகள்... பல மடங்கு உயர்ந்த கட்டணம்

Published On 2024-08-03 04:16 GMT   |   Update On 2024-08-03 04:16 GMT
  • ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
  • நீரஜ் சோப்ராவைப் போலவே மனு பாக்கரும் தேசிய விளையாட்டு பிராண்டாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்த இந்தியாவின் மனு பாக்கர், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து பங்கேற்றார். அதிலும், வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் களமிறங்கிய மனு பாக்கர், தகுதிச்சுற்றில் 590 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று பிற்பகலில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலிலும் பதக்கம் வென்று ஒரே ஒலிம்பிக்கில் 3-ஆவது பதக்கத்தை மனு பாக்கர் உறுதி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மனு பாக்கரை சுமார் 40 பிராண்டுகள் ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளது எனவும் அவரது பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு உயர்ந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்தத்திற்கு ரூ.20 முதல் 25 லட்சம் வரை இருந்த அவரது கட்டணம் தற்போது ரூ.1.5 கோடி வரை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் போலவே மனு பாக்கரும் தேசிய விளையாட்டு பிராண்டாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

Tags:    

Similar News