டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஓபன்: நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக்கை வீழ்த்திய 17 வயது ரஷ்ய வீராங்கனை

Published On 2025-03-15 14:48 IST   |   Update On 2025-03-15 14:48:00 IST
  • அரையிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸை (6-0, 6-1) என்ற செட் கணக்கில் சபலென்கா வீழ்த்தினார்.
  • 24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.

இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ்- சபலென்கா பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸை சபலென்கா (6-0, 6-1) என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான இகா ஸ்வியாடெக் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் 17 வயது மிரா ஆன்ட்ரீவா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஆன்ட்ரீவா 7-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வியாடெக் 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆன்ட்ரீவா வெற்றி பெற்றார்.

இதனால் 7-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஆன்ட்ரீவா தகுதி பெற்றார்.

24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக மிர்ரா ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.

Tags:    

Similar News