ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- இன்று 2-வது 20 ஓவர் போட்டி
- இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நடக்கிறது.
- இந்திய அணி பந்து வீச்சு சிறப்பாக உள்ளது.
ஹராரே:
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
ஹராரேவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 102 ரன்னுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.
இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஜிம்பாப்வேவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. ரவி பிஷ்னோய், முகேஷ்குமார், வாஷிங்டன் சுந்தர், அவேஷ்கான் ஆகியோர் உள்ளனர். பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். முன் வரிசை வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.
சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி வெற்றி உத்வேகத்தை தொடர முயற்சிக்கும். அந்த அணியில் பென்னெட், மயர்ஸ், சத்தாரா, முசரபானி உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.