பள்ளிகளில் தேவர் ஜெயந்தியை கொண்டாட வேண்டும்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வேண்டுகோள்
- புகை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழக்கம் லட்சக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியது.
சென்னை:
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர் பெற்றோர் கழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
தேசியம் என் உடல், தெய்வீகம் என் உயிர் என்ற உயர்ந்த சிந்தனையுடன் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், தனி மனித ஒழுக்கத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பள்ளிகளில் அவருடைய தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும். அந்த வகையில் தேவர் ஜெயந்தியை தமிழக மாணவர் ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம் என அறிவித்து புகை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழக்கம் லட்சக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியது. தனிமனித ஒழுக்கத்திலும், மனிதநேயத்திலும் வாழ்வியல் முறைகளிலும் இலக்கணமாக வாழ்ந்த சிறந்த சிந்தனையாளர். வளரும் தலைமுறையை வழிநடத்த அரசு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.