முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன்-6 பேருக்கு புதிய பதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்களாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்களாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மா.சா.மா.ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணைச் செயலாளர்களாக கடலூர் நகராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த நரசிங்கமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புரட்சி தலைவி பேரவை துணைச் செயலாளர்களாக சேலம் மேச்சேரியை சேர்ந்த மாவட்ட ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினரான கலையரசன், குமரி மாவட்டம் சுங்கான் கடையை சேர்ந்த ரோஸ்லின் பிரேமலதா, பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. பெரிய வீரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அ.தி.மு.க.வினர் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.