டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பதாகை ஏந்திய ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள்
- பாலமேடு ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
- ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர்கள் அரிட்டாபட்டியை பாதுகாக்க வேண்டும் என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்று மாடுகளை பிடிக்கச் சென்றனர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.
மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பார்வையாளர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர்கள் அரிட்டாபட்டியை பாதுகாக்க வேண்டும் என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாடுகள் மீது டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.
டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் 2025 என கோலமிட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று மாடுகள் மீது எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.