தமிழ்நாடு

கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் கூட்டுறவு ஆய்வகம் சீரமைப்பு- அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

Published On 2023-05-12 15:29 IST   |   Update On 2023-05-12 15:29:00 IST
  • கட்டிடத்தை புதுபிக்கவும், பழுது பார்க்கவும், புதிய உபகரணங்களைக் கொண்டு மேம்படுத்தவும், ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை:

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டையில் 1965-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொழில் கூட்டுறவு பகுப்பாய்வு ஆய்வகத்தில் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்துகளை, குறைந்த விலையில், ரசாயனப் பகுப்பாய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த ஆய்வுக்கூடத்திற்கான கட்டிடத்தை புதுபிக்கவும், பழுது பார்க்கவும், புதிய உபகரணங்களைக் கொண்டு மேம்படுத்தவும், ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

புதியதாக புனரமைக்கப்பட்ட இந்த ஆய்வகத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேற்று திறந்து வைத்து, தயாரிப்பாளர்கள் ஆய்வகத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து கிண்டி தொழிற்பேட்டையில் குறுந்தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.90.13 கோடி மதிப்பீட்டில் 1,97,024 சதுர அடி பரப்பளவில் 6 தளங்கள், 152 தொழிற்கூடங்களுடன், கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு தொழில் வளாக கட்டுமான பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News