காரைக்கால்: மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழா... பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட ஆட்சியர்
- காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
- சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார்
புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் நாளை(பிப்.20) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். காரைக்காலில் தங்கி இருந்தபோது. அவர் இயற்கை எய்தினார். அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.