மோடி மீதான பயத்தில் கதறுகிறது திமுக
- ஊழலில் ஊறிப்போன தி.மு.க. பா.ஜனதாவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்ற கட்சி.
- தி.மு.க. தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த தேர்தலுக்கு பிறகு மோடி ஆயுள் தண்டனை பெறுவார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். புதுவைக்கு வரும் கவர்னர்களிடம் சொத்துக்கணக்குகள் கேட்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-
விலை கொடுத்து வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு அந்த எண்ணம் தான் வரும். இன்று ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி முதல் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு சென்றவர்கள். அவர்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் என்பதையும் வெளியிட்டால் நல்லது.
மற்றவர்களின் சொத்துக்கணக்கை கேட்க ஆசைப்படும் தி.மு.க.வினர் முதலில் அவர்களது பின்புலத்தையும் இப்போதைய சொத்துக்களையும் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். ஊழலில் ஊறிப்போன தி.மு.க. பா.ஜனதாவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்ற கட்சி.
லாலுபிரசாத் யாதவ் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர். வடகிழக்கு மாநிலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஒரு 350 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுக்க ஊழல் செய்பவர்கள் செய்பவர்களோடு கூட்டணி அமைத்து மக்களிடம் ஓட்டு கேட்க போகிறார்கள்.
எப்படி மக்கள் ஆதரிப்பார்கள். ஊழலை ஒழிக்க போராடுகிறார் மோடி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிலைமை என்ன ஆகுமோ? என்ற பயத்தில் தான் இப்படி கதறுகிறது. தி.மு.க. தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.