தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு
- தங்கம் விலை இதற்கு முன்பு கடந்த மாதம் 13-ந்தேதி ரூ.38 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
- தற்போது 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்தது. கடந்த 27-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37960-க்கு விற்கப்பட்டது.
மறுநாள் அது ரூ.37,880 ஆக குறைந்தது. 29-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.37,640க்கு விற்றது. கடந்த 31-ந்தேதி விலை சற்று அதிகரித்து ரூ.37,720-க்கு விற்பனையானது. மறுநாள் பவுன் ரூ.37,840 ஆக உயர்ந்தது. கடந்த 2-ந்தேதி மீண்டும் அதிகரித்து பவுன் ரூ.37,923-க்கு விற்றது.
நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்து பவுன் ரூ.37,720-க்கு விற்பனையானது. நேற்று சற்று அதிகரித்து ரூ.37,736-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது. மேலும் 1 பவுன் தங்கம் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று தங்கம் 1 பவுன் ரூ.38,160-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை இதற்கு முன்பு கடந்த மாதம் 13-ந்தேதி ரூ.38 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. தற்போது 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4717-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ரூ.4770-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.64.40-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.90 அதிகரித்து ரூ.66.30-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.66,300-க்கு விற்பனையாகிறது.