தமிழ்நாடு

நெல்லை டவுனில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்


நெல்லையில் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போட்டி போஸ்டர்கள்

Published On 2022-06-17 12:22 IST   |   Update On 2022-06-17 12:22:00 IST
  • தலைமை ஏற்க வா... தலைவா வா...என்ற வாசகங்கள் உள்ளன.
  • எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் வாரிசு எடப்பாடியார் தலைமையில் அணிவகுப்போம்’ என வாசகங்கள் உள்ளது.

நெல்லை:

அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று குரல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒற்றை தலைமைக்கு ஆதரவாகவும், எதிராகவும் அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒற்றை தலைமை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று அவரை தலைமை ஏற்க வருமாறு பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நெல்லையில் பல்வேறு இடங்களில் போட்டி போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். 28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் நெல்லை சந்திப்பு, டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளை உள்ளிட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

அதில் 'தலைமை ஏற்க வா... தலைவா வா...' என்ற வாசகங்கள் உள்ளன. இதேபோல மற்ற நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் வாரிசு எடப்பாடியார் தலைமையில் அணிவகுப்போம்' என வாசகங்கள் உள்ளது.

Tags:    

Similar News