தமிழ்நாடு

சாலைக்காக பசுமையான மரங்களை வெட்டி அகற்றுவதா?- ராமதாஸ் கண்டனம்

Published On 2023-08-28 14:38 IST   |   Update On 2023-08-28 14:38:00 IST
  • 374 நிழல் தரும் மரங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன.
  • மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்த மரங்கள், மக்களின் விருப்பத்திற்கு மாறாக வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை வெளிவட்டச் சாலையில், திருநின்றவூர் புதுக்காலனி முதல் தாமரைப்பாக்கம் வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக அப்பகுதியில் நன்கு வளர்ந்திருந்த 374 நிழல் தரும் மரங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்த மரங்கள், மக்களின் விருப்பத்திற்கு மாறாக வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் மரங்களை வெட்டுவதைத் தவிர்த்து, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பாதுகாப்பதை மத்திய, மாநில அரசுகளின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News