திருவொற்றியூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
- நண்பர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஆண்ட்ரூஸ் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் அப்பர் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் ராபர்ட். இவரது மகன் ஆண்ட்ரூஸ் (வயது 20) தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சிலநாட்களாக இரவு நேரத்தில் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதனை அறிந்த தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த அவர் நண்பர்களிடம் செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேகம் அடைந்த நண்பர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஆண்ட்ரூஸ் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆண்ட்ரூஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.