தமிழ்நாடு

அண்ணா பல்கலை., வழக்கு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Published On 2025-01-09 21:58 IST   |   Update On 2025-01-09 21:58:00 IST
  • எப்ஐஆர் லீக் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு.
  • NICயின் தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு அரசு காரணம் இல்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில், சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எப்ஐஆர் லீக் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.

NICயின் தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு அரசு காரணம் இல்லை என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை, இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய பிற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News