தமிழ்நாடு
இந்தியா 2028-ல் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும்: சந்திரபாபு நாயுடு

இந்தியா 2028-ல் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும்: சந்திரபாபு நாயுடு

Published On 2025-03-28 20:55 IST   |   Update On 2025-03-28 20:55:00 IST
  • 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது.
  • அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம்.

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.

அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளைப் பார்த்தால், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக உயர்ந்த வளர்ச்சியை காட்டியுள்ளது.

பொருளாதாரத்தில் தற்போது முதல் நான்கு இடத்தில் இருக்கும் நாடுகளில் மூன்று நாடுகள் நல்ல மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. 2021-ல், நாம் ஐந்தாவது இடத்தில் இருந்தோம்.

அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம். 2028-ல் நாம் மூன்றாவது இடத்தில் இருப்போம். நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், 2047-ல் இந்தியா 1 அல்லது 2-வது நாடாக மாறும். நமது சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டில் இது நடக்கும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Tags:    

Similar News