சென்னையில் தொடர் செயின் பறிப்பு- கொள்ளையனை என்கவுண்டர் செய்த போலீசார்
- ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாரானபோது அவர்கள் 2 பேரையும் சுற்று வளைத்த போலீசார் கைது செய்தனர்.
கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஜாபரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு மாநிலங்களில் ஜாபர் மீது செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது ஜாபர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து ஜாபர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.