தமிழ்நாடு

திருவள்ளுவர் திருக்கோவிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2025-01-23 13:06 IST   |   Update On 2025-01-23 13:06:00 IST
  • 2.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாசுகி அம்மையாருக்கு கருங்கல்லினாலான புதிய கர்ப்பக்கிரகம் அமைத்தல்.
  • நடராஜர் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி ஆகிய சன்னதிகள் கட்டும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 15.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, மயிலாப்பூர், திருவள்ளுவர் திருக்கோவிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் திருக்கோவிலில் 2.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கல்லினாலான பொற்றாமரை குளம் அமைத்தல் மற்றும் கருங்கல் தரைத்தளம் அமைக்கும் பணிகள், 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவள்ளுவருக்கு கருங்கல்லினாலான புதிய கர்ப்பக்கிரகம், பிரகார மண்டபம் மற்றும் திருவள்ளுவர் பிறந்த இடத்திற்கு புதிய கருங்கல்லினாலான மண்டபம் கட்டும் பணிகள், 2.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாசுகி அம்மையாருக்கு கருங்கல்லினாலான புதிய கர்ப்பக்கிரகம் அமைத்தல், புதிதாக கருங்கல்லினாலான முப்பால் மண்டபம் கட்டும் பணிகள்;

2.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதி மற்றும் மகாமண்டபம் கட்டுதல், காமாட்சியம்மன் சன்னதி, கருமாரியம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, நடராஜர் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி ஆகிய சன்னதிகள் கட்டும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக மயிலாப்பூரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News