தமிழ்நாடு

தர்மபுரி பட்டாசு ஆலை வெடி விபத்து- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

Published On 2025-02-24 18:04 IST   |   Update On 2025-02-24 18:04:00 IST
  • பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்தனர்.
  • பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே முருக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

அதன்படி, தர்மபுரி அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

மேலும், கம்பைநல்லூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆறுதல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News