தமிழ்நாடு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2025-03-06 14:30 IST   |   Update On 2025-03-06 16:53:00 IST
  • தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
  • ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வெளியே வந்தார்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில்பாலாஜி உள்ள நிலையில் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News