தமிழ்நாடு

சாலையில் அனாமத்தாக கிடந்த AK47 - சென்னையில் பரபரப்பு

Published On 2025-02-04 11:02 IST   |   Update On 2025-02-04 12:45:00 IST
  • மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சென்னை:

பரபரப்பான சென்னையில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதனால் பணிக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து நெரில் மிகுந்த ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை சிவராஜ் என்பவர் மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கவர்னர் மாளிகையின் பாதுகாப்பு பணிக்குச் செல்லும் வழியில் ஆவடி CRPF காவலர் துப்பாக்கியை தவறுதலாக கீழே போட்டுவிட்டதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு CRPF-யிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News