சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு - தி.மு.க.வினர் போராட்டம்
- மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், இன்று அதிகாலை சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ் , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் முருகன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜவேல் ரத்தினம், மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, வார்டு செயலாளர் வீரா மற்றும் ரகுமான், தொ.மு.ச. காந்திமதி நாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.