சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு- தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
- தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

பலதரப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர். சிஐடியுவின் முடிவிற்கு சாம்சங் இந்தியா வரவேற்றது.
இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.