தமிழ்நாடு

நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்து உதவி செய்தேன் - சீமான்

Published On 2025-02-28 11:38 IST   |   Update On 2025-02-28 12:28:00 IST
  • ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?
  • நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.

தருமபுரி:

விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

* என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கு.

* நடிகை சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா?

* ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?

* கல்லூரியில் படிக்கும் பிள்ளையை கடத்திச்சென்று கற்பழித்தது போல் சித்தரிப்பதா?

* எனக்கு திருமணம் ஆகும் போது அதனை தடுத்து நிறுத்தி இருக்கணும்.

* சிறையில் இருந்து கருக்கலைப்பு செய்த ஒரே ஆள் நான்தான்.

* ஓராண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நானாகதான் இருப்பேன்.

* நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.

* உதவின்னு கேட்கும் போது கொடுத்து உதவுறதுதான். அவங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். 

Tags: