ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து ஸ்ரீதர் வேம்பு திடீர் விலகல்.. காரணம் இதுதான்
- ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது .
- மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. மென்பொருள் தொழில் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] உள்ளிட்டவற்றின் வருகையால் மாற்றம் கண்டுவரும் நிலையில் ஜோஹோ நிறுவனத்திலும் இந்த மாற்றம் நிகழ்கிறது.
தொடர்ந்து ஜோஹோ இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ், ஜோஹோ US பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.
ராஜேஷ் கணேசன் ManageEngine பிரிவையும், மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.