தமிழ்நாடு
பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 23 பேர் பணி நீக்கம்
- கடந்த மூன்று ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
- போக்சோ வழக்கில் 53 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த மூன்று ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 36 வழக்குகள் பள்ளியின் வெளியில் நடைபெற்றுள்ளன. சிறையில் 11 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத 23 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
போக்சோ வழக்கில் 53 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 23 பேர் நிரந்தரமாக பணியில் இருந்த நீக்கப்பட்டுள்ளனர்.