தமிழ்நாடு
இந்த ஆண்டு கோடை காலம் மிக உக்கிரமாக இருக்கும் - சென்னை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வானிலை மையம்

இந்த ஆண்டு கோடை காலம் மிக உக்கிரமாக இருக்கும் - சென்னை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வானிலை மையம்

Published On 2025-03-21 08:31 IST   |   Update On 2025-03-21 08:31:00 IST
  • தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
  • சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டை விட அதிகளவில் கொளுத்துகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொதுவாகவே கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags:    

Similar News