தமிழ்நாடு
முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜய்க்கு பதில் சொல்ல முடியாது- டி.ஆர்.பாலு

முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜய்க்கு பதில் சொல்ல முடியாது- டி.ஆர்.பாலு

Published On 2025-03-29 15:06 IST   |   Update On 2025-03-29 15:06:00 IST
  • வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க வுக்கும் இடையே தான் போட்டி என்கிற அறிவிப்பை நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் விஜய் தெரிவித்து உள்ளார்.
  • விஜய் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்யும் களம் கண்டுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க.வையும், தமிழகத்தில் தி.மு.க.வையும் மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க வுக்கும் இடையே தான் போட்டி என்கிற அறிவிப்பை நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருக்கும் நிலையில் அந்த கட்சியைப் பற்றி எதுவுமே பேசாமல் தி.மு.க.வை மட்டுமே போட்டியாளராக கருதி விஜய் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.-வை சேர்ந்த தலைவர்கள் விஜய் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, தி.மு.க.வை மன்னராட்சி என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசிய குறித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜயின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News