சென்னை-மதுரை இடையே முன்பதிவில்லா மெமூ ரெயில் நாளை இயக்கப்படுகிறது
- ரெயில் நாளை காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடையும்.
- ரெயில் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அரசு விடுமுறை நாட்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் வழக்கமான பணிகள் தொடங்கி உள்ளது. இருந்த போதும் வார இறுதி நாட்களை கணக்கில் வைத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை எடுத்துள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து மதுரை வரை முன்பதிவில்லா மெமூ ரெயில் இயக்கப்படுகிறது.
ஏற்கனவே ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ், அரசு பஸ் மற்றும் வாகனங்கள் மூலம் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் நாளை காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடையும். மறுநாள் 19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, 20-ந்தேதி காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தடையும்.
இந்த ரெயில் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.