தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஒப்புதல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2024-12-12 12:15 GMT   |   Update On 2024-12-12 12:15 GMT
  • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணடனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

'ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா' என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை இது சீர்குலைக்கும்.

எழுக இந்தியா!

இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News