உலகம்

ஈக்வடார் நாட்டில் 10 பேர் சுட்டுக்கொலை

Published On 2023-05-01 15:03 IST   |   Update On 2023-05-01 15:03:00 IST
  • அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
  • 5 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

குவாயாகில்:

தென் அமெரிக்காவின் ஒரு முனையில் ஈக்வடார் என்ற குடியரசு நாடு உள்ளது.

இந்த நாட்டில் போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது. அவர்கள் அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாடு அனுமதி அளித்து உள்ளது.

இந்நிலையில் குவாயாகில் என்ற நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் குருவியை சுடுவது போல சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் குண்டுகள் பாய்ந்து இறந்தனர். 5 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் கிடந்த துப்பாக்கி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Tags:    

Similar News