உலகம்

சிடோ புயல் எதிரொலி- ஆப்பிரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Published On 2024-12-19 01:01 GMT   |   Update On 2024-12-19 01:01 GMT
  • சிடோ புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட சிடோ புயலில் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'சிடோ' என பெயரிடப்பட்டது.

கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயலின் தாக்கத்தால், மலாவியில் கனமழை கொட்டி வருகிறது.

இதனால் அங்கு ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், அண்டை நாடான மொசாம்பிக்கையும் 'சிடோ' புயல் தாக்கியது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News