உலக சாம்பியனை மகிழ்வித்த இளம் ரசிகை- வீடியோ
- 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
- சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. போட்டி முடிந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குகேஷ் கலந்து கொண்டார். அப்போது 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
தான் குகேஷின் தீவிர ரசிகை எனக்கூறியபடி தன் கைகளால் செய்யப்பட்ட தலையணை ஒன்றை அவரிடம் காண்பித்து 'ஆட்டோகிராப்' போடும்படி கேட்கிறார். சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 20 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.