உலகம்

null
டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கத்தின் எதிரொலியால் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று மாலை 5.48 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து தகவலும் வெளியாகவில்லை.