null
நடுவானில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் - மாற்று வழியில் இயக்கப்பட்ட விமானங்கள்
- விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
- போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
ஸ்பேஸ்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் முன்மாதிரி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. ராக்கெட் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் மெக்சிகோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
ஸ்டார்ஷிப் விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுபாட்டு மையத்துடனான தொடரை இழந்தது. சோதனை முயற்சியில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் முதல் பேலோடு போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
"ஸ்டார்ஷிப் உடனான அனைத்து தகவல்தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம் - இது அடிப்படையில் மேல் நிலையில் எங்களுக்கு ஒரு ஒழுங்கின்மை இருப்பதைக் குறிக்கிறது" என்று ஸ்பேஸ்எக்ஸ் தகவல் தொடர்பு மேலாளர் டான் ஹூட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் ஸ்டார்ஷிப் தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.
ஃபிளைட் ரேடார் 24 தளத்தின் படி பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. விமானங்களின் மீது சாத்தியமான குப்பைகள் விழுவதை தவிர்க்க பாதை மாற்றியமைக்கப்பட்டன.
இது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வீடியோ ஒன்றை இணைத்து, "வெற்றி நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி!" என்று குறிப்பிட்டுள்ளார்.