தென் ஆப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை
- ஒரே குடும்பத்தில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தப்பிசெல்ல முயன்ற கொலையாளிகளை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள குவாசுலு-நடால் மாகாணத்தில் பீட்டர் மேரிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் 4 மர்மநபர்கள் பதுங்கி இருந்தனர்.
அவர்கள் திடீரென வீட்டுக்குள் சென்று அங்கு இருந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி சரமாரியாக சுட்டனர். இதில் 7 பெண்கள் ஒரு 13 வயது சிறுவன் உள்பட 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். தப்பிசெல்ல முயன்ற கொலையாளிகளை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். அவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.