உலகம்
வைரலாகும் துபாய் ஷேக்கின் ஹம்மர் கார் வீடியோ
- துபாய் ஷேக்கின் பெரிய ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
- பெரிய வாகனத்தில் முன் நிற்கும் 2 ஹம்மர் கார்கள் உண்மையிலேயே எவ்வளவு பெரியவை என்பதை காட்டுகிறது.
கார் தொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் கொட்டி கிடக்கிறது. அவற்றில் துபாய் ஷேக்கின் பிரமாண்ட ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துபாயில் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் என அழைக்கப்படும் ரெயின்போ ஷேக்கிடம் 200-க்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பெரிய ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பெரிய வாகனத்தில் முன் நிற்கும் 2 ஹம்மர் கார்கள் உண்மையிலேயே எவ்வளவு பெரியவை என்பதை காட்டுகிறது. இந்த கார்கள் வழக்கமான ஹம்மர் கார்களைவிட 3 மடங்கு பெரியவை ஆகும். இந்த கார்களின் சிறப்பு என்னவென்றால் இவற்றை சராசரி கார்களை போல சாலைகளில் ஓட்ட முடியும்.